தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் சுப்பிரமணியம்! மனிதவள அமைச்சர் சிவகுமார் வரவேற்பு

புத்ரா ஜெயா, ஜூன் 24-
கல்வி அமைச்சின் தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் சுப்பிரமணியம் இடம் பெற்றுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று தெரிவித்தார்.

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் பேசும் தமிழர் இடம் பெறாமல் போனது இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

பல மாதங்களுக்கு பிறகு தமிழ் பேசும் தமிழர் தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் இடம் பெற்றுள்ள செய்தி இந்திய சமுதாயத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளது.

மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதரியான சுப்பிரமணியம் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் பள்ளிகளிலும் இடைநிலை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ளார் .

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் இவரின் நியமனம் மிகவும் பொருத்தமானது என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles