
கோலாலம்பூர் ஜூலை 10-
ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் வேளையில் கெராக்கான் கட்சியின் சார்பில் மூன்று இந்தியர்கள் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் கெராக்கான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் செந்தோசா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் என்று கூறப்படுகிறது.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கெராக்கான் கட்சி இம்முறை ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் செந்தோசா சட்டமன்ற தொகுதியில் டத்தோ பரமேஸ்வரன் போட்டியிடுவது உறுதியாக உள்ளது.
மிகச் சிறந்த சேவையாளராக இருக்கும் டத்தோ பரமேஸ்வரன் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருந்து வரும் இவர் செந்தோசா தொகுதி மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

