உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவராக என்னை தேர்வு செய்த பிரதமர், ஓம்ஸ் தியாகராஜனுக்கு நன்றி! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர் ஜூலை 10-
மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவராக என்னை தேர்வு செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவர் பதவி என்பது மிகவும் சுமையானது.

அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்து இந்த மிகப்பெரிய பதவியை வழங்கிய பிரதமருக்கும் ஓம்ஸ் தியாகராஜனுக்கும் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

இந்த மாநாட்டின் இணையத் தலைவராக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாநாடு வெற்றி பெற நாங்கள் இணைந்து பாடுபடுவோம் என்று அவர் சொன்னார்.

இந்த மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து தரப்பினரின் ஆதரவோடு இந்த மாநாடு கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles