


புத்ரா ஜெயா , ஜூலை 12-
கடந்த 2022 ஆண்டு முழுவதும் மனிதவள அமைச்சில் சிறந்த சேவையை 630 பணியாளர்களுக்கு Anugerah Perkhidmatan Cemerlang விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
நேற்று புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 630 பணியாளர்களுக்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
சான்றிதழ்கள் பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன். மனிதவள அமைச்சின் இலக்குகள் நிறைவேற தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
திரு. ஏ. மணியம் (Tuan A. Maniam,
Timbalan Ketua Setiausaha (Dasar & Antarabangsa) விருது பெற்றவர்களில் ஒருவர் ஆவார்.

