வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் பேராக் 82.6% மதிப்பெண்களைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

ஈப்போ ஜூலை 13-
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில்
பேராக் மாநிலம் மலேசியாவில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

அதாவது பேராக் மாநிலம் 82.6% மதிப்பெண்களை பெற்றுள்ளது பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்.

SIMPOSIUM KEHARMONIAN PERUSAHAAN NEGERI
PERAK எனப்படும் பேராக் மாநில தொழிலியல் நல்லிணக்க ஆய்வரங்கை மனித வள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் .

பேராக் மாநில தொழில்துறை உறவுகள் துறைக்கு முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

2023 ஆம் ஆண்டு எதிர்காலத்தை வடிவமைக்கும் கருப்பொருளுடன்
சட்டத்தின் மூலம் போட்டித்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும்
ஊழியர்களின் நல்வாழ்வையும் அவர்களின் பணியின் தரத்தையும் பாதுகாக்கவும் இது பெரிதும் உதவும் என்றார் அவர்.

தொழில் துறை உறவுகள் மூலம்
ஒரு இணக்கமான பணியிட சூழ்நிலையை உறுதிப்படுத்த முடியும்.

முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நல்லிணக்கம் மேம்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

இன்று நடைபெற்ற தொழிலியல் நல்லிணக்க ஆய்வரங்கில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles