பினாங்கு பாகான் டாலாம் மக்களை நேரில் சந்தித்த மனிதவள அமைச்சர் சிவகுமார் 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கினார்

பாகான் டாலாம் ஜூலை 15-
பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதிற்கு வருகை புரிந்து மக்களை சந்தித்து உரையாடினார்.

கடைகளுக்கு நேரடி வருகை புரிந்த அவர் மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டியும் இதில் கலந்து சிறப்பித்தார்.

பின்னர் பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதியில் உள்ள B-40 பிரிவைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்தார்.

மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp நிறுவனத்தின் சமூக நல திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மக்களுக்கு இந்த உணவு கூடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தொகுதிற்கு வருகை புரிந்ததோடு வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகளை வழங்கிய மனிதவள் அமைச்சர் சிவகுமாருக்கு பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் கலந்து சிறப்பித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles