Batu Kawan GIATMARA தொழில் திறன் பயிற்சி மையத்திற்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் சிறப்பு வருகை

பத்து காவான், ஜூலை 16-
GIATMARA Batu Kawan நாடு முழுவதும் காணப்படும் GIATMARA திறன் பயிற்சி மையங்களில் ஒன்றாகும்.

மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், மேலாக்கா, ஜோகூர், கிளந்தான், பகாங், தெரெங்கானு, சபா மற்றும் சரவாக் ஆகிய திறன் பயிற்சி மையங்கள் உள்ளன.

தொழில்துறையின் தேவைகள் மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறமையான பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு இளைஞர்கள் திறன்களைப் பெறுவதற்கு நகரத்திற்கு வெளியேயும் நகரத்திலும் உள்ள இளைஞர்களுக்கு தொழில்நுட்ப தொழில் திறன் பயிற்சிகளை வழங்கும் நோக்கத்துடன் GIATMARA நிறுவப்பட்டது.

இயந்திரவியல், கட்டடக்கலை, போக்குவரத்து, உற்பத்தி, அச்சிடுதல், மின்னியல், கணினி & தகவல் தொழில்நுட்பம், துணிகள், மின்னணுவியல்/மெகாட்ரானிக்ஸ், சமையல், சிகையலங்காரம் & அழகு சாதனம் போன்ற 12 வகையான படிப்புகளை GIATMARA வழங்குகிறது.

பினாங்கு மாநிலத்திற்கு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் வ சிவகுமார் , பத்து காவான் கியாட் மாராவுக்கும் தனது பயணத்தை தொடர்ந்தார்.

இங்கு தையல் பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்களுடன் அவர் உரையாடி மகிழ்ந்தார்.

இந்த பயிற்சி மூலம் வருங்காலத்தில் ஒரு சொந்த தொழிலை தொடங்க முடியும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles