


கோலாலம்பூர் ஜூலை 17
ஓம்ஸ் அறவாரியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆதரவில் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை ஏற்று நடத்தும் 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தில் இருப்பதாக மனித வள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ.சிவகுமார் தெரிவித்தார்.
அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு பேராளர்கள் தங்கும் வசதி, போக்குவரத்து, உணவு உட்பட அனைத்தும் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட வெளிநாடுகளில் இருந்து 700 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மலேசியாவில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது தவிர்த்து 2,000 பார்வையாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது பெருமையளிக்கிறது.
தமிழ் அன்னைக்கு மகுடம் சூட்டும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சீரும் சிறப்புடன் நடைபெற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் முழு ஆதரவு வழங்கிய இருப்பதாக அவர் சொன்னார்
வரும் ஜூலை 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்று இன்று புத்ரா உலக புத்ரா வாணிப மையத்தில் உள்ள மனிதவள அமைச்சின் திறன் மேம்பாட்டு கழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பான கூட்டத்திற்கு தலைமையேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், மாநாட்டின் நிர்வாக குழு தலைவர் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

