

பட்டர் வொர்த், ஜூலை 17-
e -sports games என்பது தொழில்முறை போட்டிகளில் விளையாடப்படும் வீடியோ கேம்ஸ் ஆகும்.
fighting games, first-person shooters (FPS), real-time strategy (RTS), or multiplayer online போன்ற e- games விளையாட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை.
உலகெங்கிலும் உள்ள வீரர்கள் இந்த போட்டியில் பரிசுகளை வெல்ல காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது மலேசியாவிலும்
e- games பிரபலம் அடைந்து வருகிறது.
அந்த வகையில் பினாங்கு பட்டர் வொர்த் அரினா அரங்கில் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற e – games போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று அசத்தினர்.
போட்டியை தொடக்கி வைக்க சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் வ சிவகுமார், e-games போட்டியில் இளைஞர்களின் திறமையை பார்த்து வியந்து போனார் .
HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் தலைமையில் HRD Corp நிறுவனம் இந்த போட்டியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

