உணவு விநியோகம் செய்யும் GIG தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர் ஜூலை 17-
கிக் ரைடர் எனப்படும் உணவு விநியோகம் மற்றும் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் துறை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மனிதவள அமைச்சர்
வ. சிவகுமார் இன்று அறிவித்தார்.

கிக் ரைடர் என்பது பொருளாதாரத்தின் ஒரு பகுதி.
மலேசியாவில் இளைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக உள்ளது.

இது வளர்ச்சியின் ஆதாரமாக அடையாளம காணப்பட்டுள்ளது.

கிக் பொருளாதாரம் தொடர்ந்து வளரவும் ஊக்குவிக்கவும்
வேலை சந்தை மற்றும் சமூக பாதுகாப்பை அரசாங்கம் வழங்குகிறது.

தொழிலாளர்கள் உட்பட முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களின் அபிலாஷைகளை ஆதரிக்க கிக் பொருளாதாரம்
அதாவது பொருளாதார ஊக்குவிப்பு என்பது விரிவானது மற்றும்
நிலையானது என்றார் அவர்.

இப்போது ஏராளமான இளைஞர்கள் இந்த துறையில் சேலை செய்கிறார்கள்.

இருப்பினும் கிக் ரைடர் தொழிலாளர்களுக்கு என்று குறிப்பிட்ட சட்ட விதிகள் இல்லை.

இவர்களுக்கு சமூக நல பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும்,
Gig Workers (P-hailing) தொழிலாளர்கள் மீது அரசு கவனம் செலுத்துகிறது என்று அவர் சொன்னார்.

இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற கிக் ரைடர் தொழிலாளர்கள் மீதான கருத்தரங்கு நிகழ்வில் உரையாற்றிய போது மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ, கிக் மலேசிய சமூக நலத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி முகமட் சர்க்கார், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜைனி ஊஜாங், HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles