

கோலாலம்பூர் ஜூலை 19-
ஓம்ஸ் அறவாரியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆதரவில் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை ஏற்பாட்டில் நடைபெறும் 21 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மலாயா பல்கலைக்கழகத்தின் வேந்தர் அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
பல நாடுகளில் இருந்து 700 பேராளர்களும் மலேசியாவில் இருந்து 500 பேராளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
தென் கொரியா, அமெரிக்கா, இலங்கை, தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து பேராளர்கள் மலேசிய வந்தடைந்துள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து நான்கு பேருந்துகளில் பேராளர்கள் வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூலை 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்று மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ சிவகுமார் தெரிவித்தார்.

