


சிரம்பான், ஜூலை 20-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் செனாவாங் Taman Najihah வட்டாரத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த கோவில் திருப்பணிக்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று 30,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்தார்.
இன்று காலையில் கோவிலுக்கு சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார், கோவில் நிர்வாகத்தினரை சந்தித்தார்.
ராசா நாடாளுமன்ற உறுப்பினர் Cha kee chin,
சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், , காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜி. சாமிநாதன், செனட்டர் கேசவன் தாஸ் உட்பட பலரும் இதில் கலந்து
கொண்டனர்.
பின்னர் கோவில் தலைவர் பாலகிருஷ்ணன் நிர்வாகத்தின் சார்பில் மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இங்குள்ள பக்தர்களுக்கு தாய்க் கோவிலாக விளங்கி வரும் இந்த கோவில் திருப்பணிகள் சீரும் சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துவதாக மனித வள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
இந்த கோவில் தற்போது ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பத்து லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டு வருகிறது.

