


சிரம்பான், ஜூலை 20-
நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு இன்று சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் வ சிவகுமார் மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
Surau Taman Sri Mawar வட்டாரத்தில் B-40 பிரிவைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் உணவுக் கூடைகளை வழங்கினார்.
வசதி குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், தாமான் ஸ்ரீ மாவார் சூராவ் பொறுப்பாளர்கள், காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

