யாரையும் புறக்கணிக்கவில்லை! பேசுவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது! ஏற்பாட்டுக் குழு தலைவர் அமைச்சர் சிவகுமார் விளக்கம்

சிரம்பான் ஜூலை 20-
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நாளை மலாயா பல்கலைக்கழகத்தின் வேந்தர் அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வெளிநாடுகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பேராளர்கள் மலேசிய வந்தடைந்துள்ளனர்.

நாளை தொடங்கும் இந்த மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்து 500 பேராளர்களும் 2,000 பார்வையாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் உரையாற்ற தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

என் தலையில் நடைபெற்ற மாநாடு தொடர்பான கூட்டங்களில். அவரும் கலந்து கொண்டு தனது வாதங்களை முன் வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

மாநாட்டின் முதல் நாள் உரையாற்றவும் வாய்ப்பு வழங்கப்பட்டது .

இருப்பினும் ஜூலை 22 23 ஆம் தேதி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடக்கும் மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்ற அனுமதி கேட்டார்.

அவரின் விருப்பப்படியே பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இன்று சிரம்பான் Taman Najihah வட்டாரத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு 30,000 வெள்ளி மானியம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார்.

மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு தலைவர் என்ற முறையில் அனைவரையும் அரவணைத்து செல்கிறேன்.

மாநாட்டின் ஏற்பாட்டுப் பணிகள் சீரும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.

தமிழ் அன்னைக்கு மகுடம் சூட்டும் விழாவாக 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு விளங்குகிறது.

மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜூலை 22 23 ஆம் தேதி மாலை 5 மணிக்கு 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles