உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக நடைபெற உதவிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்தார் ஓம்ஸ். தியாகராஜன்

கோலாலம்பூர் ஜூலை 21-
மலேசிய திருநாட்டில் 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக நடைபெற பேருதவி புரிந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ சிவகுமார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று மாநாட்டின் நிர்வாக குழு தலைவர் ஓம்ஸ் பா தியாகராஜன் தமது உரையில் தெரிவித்தார்.

பிரதமரும் மனித அமைச்சரும் வழங்கிய ஆதரவு அளிப்பரியது என்று இன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் வரவேற்புரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1966,1987,2015 ஆகிய மூன்று முறை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்திய மலேசிய இப்போது 4 ஆவது முறையாக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றியபோது உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் மலேசியாவில் தான் தமிழர்கள் வாழ்கின்றனர் என்று புகழாரம் சூட்டினார்.

அந்த வகையில் மலேசியாவில் நடைபெறும் இந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடு வரலாற்றில் முத்திரை பதிக்கும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles