கோலாகலத்துடன் தொடங்கியது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

கோலாலம்பூர் ஜூலை 21-
தமிழ் அன்னைக்கு மகுடம் சூட்டும் வகையில் 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் வேந்தர் அரங்கில் மிகவும் விமரிசையாக தொடங்கியது .

தேசிய கீதம் மற்றும் தமிழ் வாழ்த்துடன் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு விழாவில் ஆயிரம் பேராளர்கள் மற்றும் 2,000 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் கலாச்சார நடனங்கள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா தியாகராஜன் தமது உரையில் பேராளர்களை வரவேற்று பேசினார்.

கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி சிறப்பு வருகை புரிந்து சிறப்புரையாற்றினார்.

மாநாட்டின் இணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் மாரிமுத்து, திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles