பிரதமர் , மனித அமைச்சர் சிவகுமாருக்கு நன்றி! மாநாட்டின் ஆய்வு கட்டுரைகள் செயல் வடிவம் பெறும்! துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவிப்பு

கோலாலம்பூர் ஜூலை 21-
மலேசியாவில் நடைபெறும் 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு வரலாற்றில் முத்திரை பதிக்கும் என்று கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

இந்த வெற்றிபெற பெரிதும் உதவிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மனிதவள அமைச்சர் சிவகுமார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கும் வாரி வழங்கிய செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் அவர்கள் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி வருகிறார்.

மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினர் அனைவரும் இரவு பகல் பாராது மாநாடு வெற்றி பெற கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

கடந்த பத்து நாடுகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் வெற்றி பெற்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இருப்பினும் இந்த 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் செயல் வடிவம் பெற தீவிர கவனம் செலுத்தப்படும்.

உலக அளவில் தமிழ் மொழி சிறந்து விளங்க வேண்டும். தமிழுக்கு மேலும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

மேலும் இணையம் வாயிலாக தமிழ் மொழியை பொருளாதார வணிகத்தில் மேம்படுத்த வேண்டும்.

இதற்கென நடைமுறைகள் இந்த மாநாட்டில் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் இன்று மாநாட்டின் முதல் நாளில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

இப்போது நமக்கு மிக அற்புதமான பிரதமர் கிடைத்திருக்கிறார்.

மலேசிய இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் மீது அன்பும் பாசமும் கொண்டவர்.

இவரின் தலைமையில் மலேசிய தமிழ் சமுதாயம் சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றால் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles