சூராவ் உட்பட 7 வழிபாட்டு தலங்களுக்கு 21 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கினார் மனிதவள அமைச்சர் சிவகுமார்

சிரம்பான் ஜூலை 21-
சிரம்பான் மாநிலத்திற்கு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் நேற்று நான்கு சூராவ் உட்பட 7 வழிபாட்டு தலங்களுக்கு 21 ஆயிரம் வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.

நான்கு சூராவ், இரண்டு சீனர் ஆலயங்கள் மற்றும் ஒரு கோவிலுக்கு தலா 3,000 வெள்ளியை வழங்கினார்.

சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் சேவை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட வழிபாட்டு தலங்களின் பொறுப்பாளர்கள் மானியத்தை நேரடியாக மனிதவள அமைச்சர் சிவகுமாரிடம் நிதியை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற பத்து மாணவர்களுக்கு மடிக்கணினிகளை மனிதவள அமைச்சர் சிவகுமார் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles