தமிழ்மொழியை ஒரு தகவல் வணிக களஞ்சியமாக உலகெங்கும் பரவ செய்திட வேண்டும்…. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவர் அமைச்சர் சிவகுமார் அறைகூவல்

இன்று மலேசியாவில் நடைபெறும் 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி
மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் உலகத் தமிழ் பெருமக்களே, தமிழ்
அறிஞர்களே, கவிஞர்களே, எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களே
அனைவரையும் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு தலைவர் என்ற முறையில்
அன்போடு வரவேற்கிறேன்.
அமிழ்தெனும் தமிழ்மொழியை ஒரு தகவல் களஞ்சியமாக உலகெங்கும்
பரவும் வகையில் செய்திட தமிழ் ஆன்றோர் – சான்றோர் பெருமக்கள்
துணை புரிய வேண்டும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
எல்லாக் காலத்திலும் தமிழ்ப் படைப்புகளை ஆய்வு செய்வது
மட்டுமல்லாது அதனை மற்ற இனத்தவர்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கு தமிழ்ப் படைப்புகளை மொழிப் பெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும்.
ஓம்ஸ் அறவாரியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் மற்றும் இந்திய
ஆய்வியல் துறை மலாயா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 11
ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறந்த முறையில் வெற்றி பெற
எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும்
மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மாநாடு வெற்றி பெற முழு ஆதரவு வழங்கிய மலேசிய பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு
மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவர் என்ற முறையில் மீண்டும் நன்றியை பதிவு செய்கிறேன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles