
கோலாலம்பூர் ஏப்ரல் 30-
பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி ராமசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் தனக்கு அன்பு தேவையில்லை, மாறாக மலேசிய இந்தியர்களுக்கு நியாயமான அரசு தேவை என்று பதில் கொடுத்துள்ளார்.
“அன்பு இல்லாததால்” தாம் பெரிக்கத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணியில் இடையும் படி தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறியதற்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இப்போது மலேசியாவில் ஐக்கிய மக்கள் உரிமைக் கட்சியை (Urimai) வழிநடத்தும் அவர், “அன்பைப் பெற PN இல் சேருமாறு பரிந்துரைத்ததற்கு நன்றி Fahmi” என்றார்.
“மன்னிக்கவும், எனக்கு அன்பு தேவையில்லை, ஆனால் அதற்கு மலேசிய இந்தியர்களுக்கு நியாயமான அரசாங்கம் தேவை என்று அவர் பதில் கொடுத்துள்ளார்.
மலேசிய கினி

