
புத்ராஜெயா, ஏப் 30: தேசிய கல்வியை மறுசீரமைக்க பல்வேறு முக்கிய திட்டங்களைக் கல்வி அமைச்சகம் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
இதில் பாலர் பள்ளி மற்றும் 2027 பள்ளி பாடத்திட்டம் முறையை மறுசீரமைத்தல், கற்றல் நடவடிக்கையில் ஏற்படும் இடையூறுகளை களைதல் ஆகியவை அடங்கும்.
மாணவர்களின் கற்றல் பிரச்சனைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே தீர்வு காணப்படுவதை உறுதி செய்வதற்கு அதன் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாலர் பள்ளி கல்வி விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஆசிரியர்களின் திறன் மற்றும் தொழில் முறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்குவதன் மூலம் அவர்களின் நிபுணத்துவத்தில் கவனம் செலுத்தப்படுகிறது என கல்வி அமைச்சு தெரிவித்தது.
bernama

