


சிரம்பான் ஜூலை 23-
இரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த 30 ஊழியர்களுக்கு உதவும் வகையில் சொக்சோ நிறுவனத்தின் காப்புறுதி திட்டத்தின் மூலம் இன்று 50,000 வெள்ளி வழங்கப்பட்டது.
இன்று சிரம்பான் சொக்சோ நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேரடியாக 30 தொழிலாளர்களுக்கு இந்த நிதியுதவியை வழங்கினார்.
ஊழியர்களின் சம்பளத்திற்கு ஏற்ப இந்த சொக்சோ காப்புறுதி நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டன.
1,300 வெள்ளி முதல் 1,600 வெள்ளி வரை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
பொருளாதார நிதி நெருக்கடியினால் ரப்பர் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் எலக்ட்ரோனிக் தொழிற்சாலை மூடப்பட்டதால் 526 தொழிலாளர்கள் வேலையை இழந்தனர்.
இதில் 2017 ஆம் ஆண்டு தொழிலாளர் காப்புறுதி திட்டத்தின் கீழ் 30 தொழிலாளர்களுக்கு சொக்சோ காப்புறுதி மூலம் 50,000 வெள்ளி வழங்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 526 தொழிலாளர்களுக்கு 13 லட்சத்து 70,000 வெள்ளி வழங்கப்படவுள்ளது.
புதிய வேலை கிடைக்கும் வரை இந்த தொகை இவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்ச்சியில் சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், நெகிரி செம்பிலான் மாநில சொக்சோ இயக்குநர் நூர் முகம்மது பக்தியர் கலந்து சிறப்பித்தனர்.