தரமான ஆய்வுக் கட்டுரைகளை தேர்வு செய்து Scopus database -இல் சமர்ப்பிக்க வேண்டும்! அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

கோலாலம்பூர் ஜூலை 23-
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்
விவாதிக்கப்பட்ட ஆராய்ச்சிகளை தேர்வு செய்து journal indexed in Web of Science அல்லது Scopus database ல் சமர்பிக்கப்பட வேண்டும் என்று மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ சிவகுமார் தெரிவித்தார்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில். சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மீது தூரித நடவடிக்கை எடுத்து செயல்படுத்த வேண்டும் .

மேலும் இணையம் வாயிலாக தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காலத்தால் என்றென்றும் அழியாத செழுமை வாய்ந்த மொழிதான் தமிழ் மொழியாகும்.

இத்தகைய வளமை பொருந்திய நமது தாய் மொழியான தமிழ் மொழிக்கு இன்னும் பல இலக்கிய அணிகலன்களை சூட்டி அழகு சேர்ப்போம்.

தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால் தமிழ் மொழியின் பண்பாட்டின் பெருமையை அனைவரும் உணர்வார்கள் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles