



சிரம்பான் ஜூலை 23-
HRD Corp care எனப்படும் சமூக நல திட்டத்தை நெகிரி செம்பிலான் மாநிலத்திலும்
அனைத்து மூகத்திற்கு சேவை செய்யும் தனது பணியை HRD Corp விரைவு படுத்தியுள்ளது.
மனிதவள அமைச்சர் சிவகுமார் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்
1 சீக்கியர் ஆலயம் மற்றும் 11 கோவில்
வழிபாட்டுத் தலங்களுக்கு நன்கொடைகளை வழங்கினார்.
மேலும் உதவிகள் தேவைப்படும் 300 குடும்பங்களுக்கு உணவு கூடைகளும் வழங்கப்பட்டன.
தேர்வுகளில் சிறந்து விளங்கிய 12 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் கற்றலை எளிதாக்க மடிக்கணினிகளை நன்கொடையாகப் பெற்றனர்.
HRD Corp வழங்கிய இந்த மடிக்கணினிகள் மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மக்களுக்கு சேவை செய்வதற்கு சிறந்த முயற்சிகளை மேற்கொண்ட HRD Corp நிறுவனத்தின் சேவையை பெரிதும் பாராட்டுவதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில்
இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகள் மற்றும்
சமையல் பயிற்சி போன்றவையும் நடத்தப்பட்டது.
இ- ஸ்போர்ட்ஸ் போட்டியின் மூலம் வெற்றி பெற்றவர்களுக்கு 10,000 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
HRD Corp நிறுவனத்தின் இந்த சமூக நல திட்டம் சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று அவர் பாராட்டினார்.
HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் தலைமையில் இந்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

