


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது சொந்த தொகுதியான தம்புனில் உள்ள ஐந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு விவேக சாதனங்களை வழங்கியுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் விவேக சாதன வசதிகள் கொண்ட பள்ளிகளாக உருமாற்றப்பட வேண்டும் என்பதை அவர் இலக்காக கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக, தம்புனில் உள்ள சத்திய லீலா தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு இரு விவேக வெண் பலகையும் இரு கணினிகளையும் பிரதமர் வழங்கியுள்ளாதக அவரின் சிறப்பு அதிகாரி ஆர்.சுரேஸ் குமார் தெரிவித்தார்.
அத்தொகுதியில் உள்ள இதர நான்கு தமிழ்ப்பள்ளிகளுக்கும் தலா இரண்டு விவேக வெண் பலகைகள் விரைவில் வழங்கப்படும் என நேற்று சத்திய லீலா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற 49ஆவது போட்டி விளையாட்டினை தொடக்கி வைத்த சுரேஸ் குமார் கூறினார்.
நாட்டிலுள்ள மற்ற தமிழ்ப்பள்ளிகளிலும் இதே போன்று விவேக சாதனங்களுடன் மாணவர்கள் கல்வி கற்க பிரதமர் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

