உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்!முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

சிரம்பான் ஜூலை 23-
நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி
மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று கேட்டுக் கொண்டார்.

நெருக்கமான காலக் கட்டத்தில் தொழிலாளர்களை குறைக்க விரும்பும் முதலாளிகள் தங்களிடம் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்களை குறைக்க வேண்டுமே தவிர உள்ளூர் தொழிலாளர்கள் அல்ல என்றார் அவர்.

உள்ளூர் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் உள்ளூர் தொழிலாளர்களை
நீக்க வேண்டாம் என்றார் அவர்.

இரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த 30 தொழிலாளர்களுக்கு சொக்சோ காப்புறுதி நிறுவனத்தின் சார்பில் இன்று 50,000 வெள்ளி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles