உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தது புதிய சகாப்தமாகும்! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

கோலாலம்பூர் ஜூலை 23-

மலேசிய அரசு மற்றும் ஏற்பாட்டுக் குழு சார்பாக, 11ஆவது உலகத் ஆராய்ச்சி மாநாட்டின் வெற்றியை பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ சிவகுமார் தெரிவித்தார்.

தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்.

உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது.

உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் பல நாட்டிலிருந்து மாநாட்டில் வந்து கலந்து கொண்டுள்ளார்.

இந்த வருடம் மலேசிய நாட்டில் 11 ஆம் உலக ஆராய்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியதை எண்ணி நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.

இதற்கு முன்பு நடந்த மாநாடுகளைக் காட்டிலும் 2023 ஆம் ஆண்டில் நடைபெறும் இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கும்.

அதே வேளையில், ஒரு புது சகாப்தத்தையும் தொடக்கி உள்ளது.

சுமார் 3,000 தமிழறிஞர்கள் பங்கேற்று, 501 ஆராய்ச்சியின் படைப்புகள் இந்த அரங்கில் சமர்பிக்கப்பட்டன.

இதை தவிர்த்து, இலட்சக்கணக்கான ஒன்லைன் பார்வையாளர்கள் இந்த மாநாட்டை கண்டு களித்தனர்.

இதுவே இந்த மாநாட்டின் மிக பெரிய வெற்றியாகும்.

இது மாநாட்டின் கடைசி நாள் என்றாலும், மாநாட்டு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் சில படிகள் செய்யப்பட வேண்டும்.

இம்மாநாட்டின் மையக் கருப்பொருளான “இணைய யுகத்தில் தமிழ்” என்ற தலைப்பில், இலக்கியவாதிகள், மொழியியலாளர்கள் மற்றும் பலர் தமிழர்களின் தொன்மை, தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் நாகரிகம் குறித்த தங்கள் கண்டுபிடிப்புகளை ஆய்வுக் கட்டுரைகளில் சமர்ப்பித்தனர்.

ஆய்வாளர்கள் அறிவுபூர்வமாக சமர்ப்பித்த கட்டுரைகளை அனைத்தும் உங்கள் செவிகளுக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்திருக்கும் என நம்புகிறேன் என்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles