முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவுநாள்!!

ஜோகூர் பாரு,மே17:
ஓர் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு செம்பருத்தி தோழர்களின் ஏற்பாட்டில் “மே 18” நினைவுநாள் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகளை எடுத்துரைக்கவும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வு 18ஆம் தேதி மே மாதம் 2024 (சனிக்கிழமை) மாலை மணி 7.30 அளவில் ஸ்கூடாய் KMJ CONSULTANCY ,தாமான் இம்பியான் என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைத்துலக சட்ட ஆலோசகரும் பாலஸ்தீன அதிகாரசபையின் சட்ட ஆலோசகருமான பேராசிரியர் பிரான்ஸிஷ் ஹ போய்லெ,பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை போராளியுமான ஹசான் கரீம் ஆகியோருடன் மனித உரிமை வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான மகா இராமகிருஸ்ணனும் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் செயல்பாட்டாளரும் முன்னாள் ஊடகவியலாளருமான தர்மலிங்கம் அவர்கள் தொகுப்பாளராகவும் நிகழ்வினை வழிநடத்துவார்.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் நிகழ்ந்த மாபெரும் இன அழிப்பு நடவடிக்கையை நினைவுக்கூறுவதோடு உலக மனித உரிமை இயக்கங்களும் ஐநாவும் அன்று நிகழ்த்தப்பட்ட கொடுரமான அட்டூழியங்களுக்கு இலங்கையின் சிங்கள அரசு மீது நடவடிக்க எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் கொடுரத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

அவ்வகையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செம்பருத்தி தோழர்கள் அமைப்பு ஜோகூர் மாநிலத்தில் இயங்கக்கூடிய அமைப்புகளோடும் மனித உரிமை ஆர்வலர்களோடும் இந்நிகழ்வினை முன்னெடுத்து வருகின்றனர்.முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பிற்கு நிச்சயம் ஒருநாள் நியாயம் கிடைக்கும் என்னும் பெரும் நம்பிக்கையோடு.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளவும்,நிகழ்வு குறித்து கூடுதல் தகவல் பெறவும் ஏற்பாட்டுக்குழுவின் பொறுப்பாளர்களை 017-754 0597 அல்லது +6017 881 1360 என்னும் எண்ணில் தொடர்புக் கொள்ளுமாறும் ஏற்பாடு குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles