
உலு திராம், மே 17-
ஜொகூரில் உள்ள உலு திராம் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு காவலர்களைக் கொன்று மற்றொருவரைக் காயப்படுத்திய சந்தேக நபர் ஜெமா இஸ்லாமியா (JI) பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது என்று மலேசிய போலீஸ் படைத்தலவைர் டான்ஸ்ரீ Razarudin Husain தெரிவித்தார்
22 வயதுடைய சந்தேகநபரின் உண்மையான நோக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை.
அவரது குடும்பத்தினர் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“ஜோகூரில் உள்ள அனைத்து ஜேஐ உறுப்பினர்களையும் அடையாளம் கண்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லுமாறு எஸ்பி (சிறப்பு பிரிவுக்கு ) உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் இன்று ஜோகூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசிய கினி

