மாட்டு பண்ணையாளர்களுக்குமாற்று நிலத்தை கொடுங்கள் !உரிமை கட்சி கோரிக்கை

மா. பவளச்செல்வன்

ஷா ஆலம், மே 17-
புக்கிட் கெமுனிங் மாட்டுப் பண்ணையை மாவட்ட அலுவலகம் நேற்று 16/5/2024 உடைக்க முற்பட்ட சம்பவம் இந்தியர்களின் வாழ்வாதார தொழில்களை முடுக்கும் நடவடிக்கையாக இருக்கிறது என்று உரிமை கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக சகோதரர் செல்வராஜு மற்றும் சத்யாவின் மாட்டுக் கொட்டகையை தற்காக்கும் முயற்சியில் உரிமை கட்சி ஈடுபட்டு வருகிறது.

1995 முதல் இதே இடத்தில் மூன்றாவது தலைமுறையாக பண்ணையை நடத்தி வரும் இவர்கள் பல முறை மாவட்ட நில அலுவலகத்தில் அவ்விடத்தை விண்ணப்பம் செய்வதாலும் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்படுகிறது.

இந்த பன்னை கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் இருக்கிறது.

மாட்டுப் பண்ணைக்கு மாற்று நிலம் கொடுத்த பிறகு கொட்டகையை உடைக்கலாம் என்ற கோரிக்கையை முன்வைத்து பேச்சு வார்த்தை நடத்தினோம்.

மாற்று நிலம் கொடுக்க
அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மாட்டுக் கொட்டகை உடைபடுவதை மேலும் நீடிக்க வேண்டும் மற்றும் மாற்று நிலம் கொடுக்க வேண்டும் என்று உரிமை கட்சி பாட்டுப் பண்ணை உரிமையாளர் மற்றும் இந்திய சமுதாயத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறது

இது மட்டுமின்றி, மாநில அரசாங்கம் இந்தியர்கள் காலங்காலமாக நடத்தி வரும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்வதற்கு சிலாங்கூர் மாநிலத்தில் 1000 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறோம் என்று
சிலாங்கூர் & விலாயா
உரிமை கட்சி ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் குப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles