10 மில்லியன் இளைஞர்களுக்கு100 வெள்ளி e- wallet கிரெடிட்! பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர் ஜூலை 27-
நாட்டில் உள்ள 21 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்கள் மற்றும் ஆண்டு வருமானம ஒரு லட்சம் ரிங்கிட் அல்லது அதற்கும் குறைவான சம்பளம் பெறும் அனைத்து மலேசியர்களுக்கும்
100 வெள்ளி e -wallet கிரெடிட் பெறுவார்கள் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை இன்று இனிப்பான செய்தியை வெளியிட்டார்.

B40 மற்றும் M40 தரப்பைச் சேர்ந்த 10 மில்லியன் மலேசியர்கள் இந்த 100 ரிங்கிட் e -wallet கிரெடிட் பெற தகுதி பெற்றுள்ளனர்.

இன்று Ekonomi மக்களுக்கான கூடுதல் வசதிகள் வாய்ப்பு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி, மனிதவள அமைச்சர் வ சிவகுமார், கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ, போக்குவரத்து அமைச்சர் அந்தோனிஷ லோக் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பத்து மில்லியன் இளைஞர்களுக்கு 100 வெள்ளி e – wallet தொகையை வழங்க அரசாங்கம் முன் வைத்திருப்பதை மனிதவள அமைச்சர் சிவகுமார் வரவேற்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles