

காஜாங், தாமான் காஜாங் உத்தாமா (காஜாங் 2) ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் பூமி பூஜை நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பூமி பூஜை சுற்று வட்டார பக்தர்களின் பக்தி பரவசத்தோடு மயில்வாகனம் குருக்கள், கே.பி.ராஜேந்திரன் குருக்கள், கணேஷ் குருக்கள் ஆகியோரின் தலைமையில் பூமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த ஆலய பூமி பூஜைக்கு மஇகா சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டத்தோ என்.ரவிச்சந்திரன், மஇகா பலாக்கோங் ஜெயா கிளைத் தலைவர், டத்தோ புருஷோத்தமன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் வெள்ளிக்கிழமைதோறும் பூஜைகள், மாணவர்களுக்கு தேவாரம் போன்ற பல்வேறு சமய நடவடிக்கைகள் நடைபெறும் என்று ஆலயத் தலைவர், எஸ்.எம்.கதிர்வேலு தெரிவித்தார்.
ஆலயத் திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் இப்பணி சீராக நடைபெறுவதற்குப் பொது மக்கள் தங்களால் ஆன நிதியுதவி மற்றும் பொருளுதவி வழங்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்,
இதற்கிடையில் ஆலயத்திற்கு வெ.1,000 நன்கொடை வழங்கியது மட்டுமின்றி ஆலயத்திற்குப் பளிங்குக் கற்கள் மற்றும் கூரையைப் பொருத்துவதற்கானச் செலவுகளையும் டத்தோ ரவிசந்திரன் ஏற்றுக் கொண்டார்.
ஆலயத் தலைவர், கதிர்வேலு டத்தோ ரவிசந்திரன், டத்தோ புருஷோத்தமன் ஆகியோருக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த பூமி பூஜையைப் பற்றிய மேல் விவரங்களுக்கு ஆலயத் தலைவருடன் 016-382 9736 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

