

கூலிம் ஜூலை 29-
உள்ளூர் தொழிலாளர்களை பணியமர்த்துதல்’ பிரச்சாரம் இவ்வாண்டு ஜூன் 4 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் மூலம் நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் முதலாளிகள் ஒன்றிணைந்து பணியாற்றவும் ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
படிப்படியாக உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துங்கள் என்று அனைவருக்கும் நினைவூட்டி வருகிறோம்.
நிலையான வேலைவாய்ப்பு மூலம். உள்ளூர் தொழிலாளர் களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
அது நிறுவனத்தின் லாபம் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது என்றார்.
MYMid Career 40 திட்டத்தின் மூலம்
முதலாளிகள் 40 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர் என்றார் அவர்.
இன்று கெடா கூலிம் போலி டெக்னிக் மண்டபத்தில் சொக்சோவின் வேலை வாய்ப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

