வேலை இல்லாதவர்களுக்கு உதவுவதில் Perkeso MYFutureJobs பெரும் அளவில் வெற்றியை தேடித் தந்துள்ளது! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

கூலிம் ஜூலை 28-
மனிதவள அமைச்சுடன் இணைந்து Perkeso நிறுவனம் நடத்திய My future Jobs festival மூலம் நாட்டில் 3 லட்சத்து 93,985 பேருக்கு வெற்றிகரமாக வேலை கிடைத்துள்ளது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.

கெடா மாநிலத்தில் கூலியில் இன்று சொக்சோவின் வேலை வாய்ப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 3.6 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசிய வேலையின்மை விகிதம் 3.5 சதவிகிதமாகக் குறைந்திருந்தது.

வேலையில்லாதவர்களுக்கு உதவுவதில் மனித வள அமைச்சின் சொக்சோவின் முயற்சிகள் பெரும் அளவில் வெற்றியை தேடித் தந்துள்ளது.

கெடா மாநிலத்தைப் பொறுத்தவரை, வேலையின்மை விகிதம் இதே காலகட்டத்தில் 3.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2.8 சதவீதமாக குறைந்துள்ளது

2022 முதல் ஜூன் 30, 2023 வரை, MYFutureJobs போர்ட்டல் சேவையின் மூலம் மொத்தம் 393,985 வேலை தேடுபவர்கள் நாட்டில் பல்வேறு துறைகளில் வேலைகளில் வெற்றிகரமாக இடம் பெற்றுள்ளனர்.

அந்த எண்ணிக்கையில், 14,793 பேர் கெடா மாநிலத்தில் வேலை கிடைத்துள்ளது என்று அவர் சொன்னார்.

கெடா கூலிம் போலி டெக்னிக் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 44 நிறுவனங்கள் பங்கேற்று 4,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.

கெடா மாநில மக்கள் இந்த வேலை வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மனிதவள துணை அமைச்சர் முஸ்தபா சக்முட்,
சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles