


கூலிம் ஜூலை 28-
இல்லத்தரசிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப் பட்டது.
Skim Keselamatan Sosial Suri Rumah எனப்படும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 81 ஆயிரத்து 17 இல்லத்தரசிகள் பதிவு செய்துள்ளனர் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று அறிவித்தார்.
இவ்வாண்டு ஜூலை 23 ஆம் தேதி நிலவரப்படி, கெடா மாநிலத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 17 பேர் பங்களித்துள்ளனர்.
சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் கணவர்களும் தங்கள் மனைவிகள் சார்பாக பங்களிப்பு செய்யலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கெடா மாநிலத்தில் மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று கூலிம் போலி டெக்னிக் மண்டபத்தில் வேலை வாய்ப்பு கண்காட்சி மற்றும் இல்லத்தரசிகள் சமூக நல பாதுகாப்பு திட்டத்தை மனிதவள அமைச்சர் சிவகுமார் தொடக்கி வைத்தார்.
இரு நாட்கள் நடைபெறும் இந்த நிழச்சியை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்த சொக்சோ நிறுவனத்திற்கு மனித வள அமைச்சர் சிவகுமார் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இரு நாட்கள் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் 4,000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தியுள்ளது.
40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

