

ரவாங் இந்தியர் கால்பந்து கிளப்பின் முயற்சியில் இரண்டாவது ஆண்டாக நமச்சிவாயகம் கிண்ண கால்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி சினாரான் புடி தேசிய பள்ளியில் இப்போட்டி நடைபெறவிருக்கிறது.
அதை தொடர்ந்து பரிசளிப்பு விழாவுடன் கூடிய விருந்தோம்பல் நிகழ்ச்சி மாலை 6 மணி தொடங்கி ரவாங் இந்தியர் கால்பந்து கிளப்பின் மண்டபத்தில் நடைபெறும். கிளப்பின் ஆலோசகரான டத்தோஸ்ரீ ராதாகிருஷ்ணன்,அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ லதா வெற்றியாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்குவார்.
இப்போட்டி விளையாட்டினை ரவாங் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் சுவா வெய் கியாட் தொடக்கி வைப்பார் என்று ஏற்பாட்டு குழுவின் தலைவர் ஹம்சா ஒஸ்மான் கூறினார்.
ரவாங் இந்தியர் கால்பந்து கிளப்பிற்கு தொடர்ந்து நல்லாதரவை வழங்கி வரும் கிளப்பின் ஆலோசகர் டத்தோஸ்ரீ ராதாகிருஷ்ணன், அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ லதா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் கால்பந்து வரலாற்றில் சிறந்து விளங்கிய விளையாட்டாளர் நமச்சிவாயகத்தை நினைவுக்கூறும் வகையில் இப்போட்டி விளையாட்டு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

