


லூனாஸ், ஜூலை 28-
கெடா மாநிலத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேற்று லூனாஸில் உள்ள காமாட்சி சிறுவர்கள் இல்லத்திற்கும் நேரடி வருகை புரிந்தார்.
காமாட்சி சிறுவர்கள் இல்லத்தை பராமரித்து வரும் பொறுப்பாளர்களுடன் உரையாடி மகிழ்ந்த மனித வள அமைச்சர் சிவகுமார் பின்னர் சிறுவர்களையும் சந்தித்து பேசினார்.
HRD Corp சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக காமாட்சி சிறுவர்கள் இல்லத்திற்கு 40 உணவு கூடைகளையும் 5,000 வெள்ளி காசோலையையும் வழங்கி பேருதவி புரிந்தார்.
Kedah kulim Sunshine Cottage Welfare Society இல்லத்திற்கும் வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் 60 உணவு கூடைகளையும் காசோலையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

