தமிழர்கள் காலை வாரி விடுவார்கள் என்ற முத்திரை அகற்றப்பட வேண்டும்! மனிதவள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

கோலாலம்பூர் ஜூலை 30-
உலகத் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. ஒரு தமிழன் முன்னேறி வந்தால் இன்னோரு தமிழன் காலை வாரிவிடுவான் என்ற நண்டுகதை முத்திரை முற்றாக அகற்றப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் வலியுறுத்தினார்.

ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற வரலாறு எழுதப்பட வேண்டும்.

இனியும் தமிழர்களை
நண்டு கதையோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்று டிரா மலேசிய மற்றும் தி ரெஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற உலகத் தமிழர்கள் தொழில் முனைவோர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலகில் வாழும் தமிழர்கள் மத்தியில் தொழில் புரட்சி ஏற்பட வேண்டும்.

தமிழர்கள் ஒற்றுமையானவர்கள், ஒருவருக்கு ஒருவர் உதவக்கூடியவர்கள் என்ற புதிய வரலாறு எழுதப்பட வேண்டும்.

இதன் மூலம் உலகத் தமிழர்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்க செய்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles