அகாடமி இன் இண்டஸ்ட்ரி முன்முயற்சியை செயல்படுத்துவது தொடர்பில் ரபிஸியுடன் மனிதவள அமைச்சர் சிவகுமார் பேச்சுவார்த்தை!

புத்ரா ஜெயா, ஜூலை 27-
பொருளாதார அமைச்சின் மெனரா பிரிஸ்மாவில் நேற்று அகாடமி இன் இண்டஸ்ட்ரி (Inisiatif Academy In Industry (AiI) முன்முயற்சியை செயல்படுத்துவது தொடர்பாக பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியுடன் மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த முக்கிய சந்திப்பு கூட்டத்தில் இரு அமைச்சுகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டு கருத்துகளை பறிமாறிக் கொண்டனர்.

அகாடமி இன் இண்டஸ்ட்ரி (AiI) முன்முயற்சியின் மூலம் பட்டதாரிகள் தொடர்ந்து பணியாற்றுவதற்கும், திறமையான தொழிலாளர்களாக ஆவதற்கு பயிற்சி பெறுவதற்கும் இப்போது வாய்ப்பு உள்ளது.

இந்த முயற்சியை செயல்படுத்துவது தொடர்பில் இரு அமைச்சர்களும் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles