Batu Gajah Pusing ஸ்ரீமகா முனீஸ்வரர் ஆலயத்திற்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் 5,000 வெள்ளி மானியம்

பத்து காஜா, ஜூலை 26-
தனது பத்து காஜா நாடாளுமன்ற தொகுதிக்கு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் ஜாலான் பூசிங்கில் உள்ள ஸ்ரீ மகா ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு 5,000 வெள்ளி மானியம் வழங்கினார்.

நேற்று ஆலயத்திற்கு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் காசோலையை ஆலயப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.

துரோனோ சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Steven Tiu, மெங்கெலும்பு சட்டமன்ற உறுப்பினர் Steven Chaw மற்றும் ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் Cheah ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

பத்து காஜா தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றவாறு உதவிகள் செய்து வரும் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முனீஸ்வரர் ஆலயத் தலைவர் பாஸ்கரன் தெரிவித்தார்.

பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்லும் மனிதவள அமைச்சர் சிவகுமார் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறார் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles