குட்வில் கால்பந்து கிளப்புக்கு இளம் தொழிலதிபர் சரவணன் குழந்தைவேலு ஜெர்சிகளை அன்பளிப்பு செய்தார்

நாட்டில் புகழ்பெற்ற இந்தியர் கால்பந்து கிளப்புகளில் ஒன்றாக சிலாங்கூர் குட்வில் கிளப் விளங்குகிறது.

சிலாங்கூர் பிரிமியர் லீக் கிண்ணப் போட்டி உட்பட பல போட்டிகளில் பங்கேற்று முத்திரை பதித்த பெருமை குட்வில் கிளப்புக்கு இருக்கிறது.

புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் புவியரசனை தலைவராக இருக்கும் குட்வில் கிளப் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை காலங்களில் ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவற்ற இல்லங்களுக்கும் உதவிகளை வழங்கி வருகிறது.

குட்வில் கால்பந்து கிளப் மேன்மேலும் சிறக்க ஷா ஆலம் கோத்தா கெமுனிங்கை சேர்ந்த இளம் தொழிலதிபர் சரவணன் குழந்தைவேலு ஒரு செட் ஜெர்சிகளை அன்பளிப்பு செய்து பேருதவி புரிந்துள்ளார்.

Systech Solution SDN BHD, Good Success solutions sdn bhd. நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனருமான சரவணன் குழந்தைவேலுவுக்கு குட்வில் கிளப் தலைவர் புவியரசன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நேற்று குட்வில் கிளப்புக்கு இளம் தொழிலதிபர் சரவணன் குழந்தைவேலு ஜெர்சிகளை அன்பளிப்பு செய்த நிகழ்வில் செயலாளர் நிக்கி, செயலாளர் சோமசுந்தரம், கோபால், குணா, செல்வராஜூ, மணியம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles