

சபா பெர்ணாம், ஜூலை 26-
சிலாங்கூர் சபா பெர்ணாம் செகிஞ்சாங் தொகுதியில் உள்ள 100 குடும்பங்களுக்கு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று உணவுக் கூடைகளை வழங்கி உதவி புரிந்தார்.
செகிஞ்சாங் சீனர் கோவில் மண்டபத்தில் இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் சிவகுமார் உணவுக் கூடைகளை
நேரடியாக மக்களுக்கு எடுத்து வழங்கினார்.
உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு இந்த உணவு கூடைகள் பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் செகிஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

