செகிஞ்சாங்கில் பத்து மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் மனிதவள அமைச்சர் சிவகுமார்

சபா பெர்ணாம்
ஜூலை 26-
எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற பத்து மாணவர்கள் உயர்கல்வியை கற்பதற்கு ஏதுவாக மனிதவள அமைச்சர்
வ. சிவகுமார் இன்று மடிக்கணினிகளை வழங்கி பேருதவி புரிந்தார்.

இன்று காலையில் சபா பெர்ணாம் செகிஞ்சாங் சீனர் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பத்து மாணவர்கள் நேரடியாக மடிக்கணினிகளை மனிதவள அமைச்சர் சிவகுமாரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

குறைந்த வருமானம குடும்பங்களை சேர்ந்த இந்த மாணவர்கள் தங்கு தடையின்றி உயர் கல்வியை பயில இந்த மடிக்கணினிகள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

மடிக்கணினிகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் மனித வள அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் செகிஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles