சட்டமன்ற தேர்தல்களில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு முழு ஆதரவு வழங்குங்கள்! மனிதவள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

சபா பெர்ணாம் ஜூலை 26-
ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலேசியர்கள் முழு ஆதரவு வழங்கும்படி மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இடம் பெற்றுள்ள ஒற்றுமை அரசாங்கம் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்கிறது.

நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சீரடைந்து வரும் வேளையில் மலேசியர்களும் சுபீட்சமாக வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு ஆறு சட்டமன்ற தேர்தலில் மலேசியர்கள் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

இந்தியர்களின் முழுமையான ஆதரவு ஒற்றுமை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை என்றார் அவர்.

இன்று சபா பெர்ணாம் செகிஞ்சாங் சட்டமன்ற தொகுதியில் பத்து மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles