பந்திங் தொகுதி மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவேன்! ஜசெக வேட்பாளர் ராய்டு அறிவிப்பு

பந்திங் சட்டமன்றத் தொகுதியில் தம்மை வேட்பாளராக களமிறக்கியுள்ள ஜசெக, பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ராய்டு வீரமன் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக பந்திங் சட்டமன்றத் தொகுதியை தக்க வைக்க பாடுபடுவேன்.

அதே வேளையில் இங்கு பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்காளர்களிடையே ஆதரவு பெரும்பான்மையாக இருக்கிறது.

அதுவே தமது வெற்றிக்கு அடித்தளமாக அமைவதோடு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைலையிலான ஒற்றுமை அரசாங்கம் சிலாங்கூர் மாநிலத்தில் அமைக்கப்படும் என்று ராய்டு தெரிவித்தார்.

பந்திங் வேட்பாளராக தாம களமிறங்கினாலும் பிற தொகுதிகளில் களமிறங்கும் பிஎச் வேட்பாளர்களுக்கு ஆதரவாக் பிரச்சார நடவடிக்கையை முன்னெடுப்பேன் என்று அவர் மேலும் சொன்னார்.

பந்திங் வேட்பாளராக தமக்கு வாய்ப்பு வழங்கிய சிலாங்கூர் ஜசெக தலைவர் கோபிந்த் சிங், செயலாளர் இங் ஸி ஹான், ஜசெக, பிஎச் தலைமைத்துவத்திற்கு நன்றி கூறி கொள்வதாக பாப்பராய்டு தெரிவித்தார்.

இதனிடையே புக்கிட் காசிங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ராஜிவ் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles