

நீலாய், ஜூலை 30-
இந்துக்கள் மத்தியில் சமய உணர்வை ஊட்டி வளர்க்க
மலேசிய இந்து சமம் மற்றும் சைவ சமய அமைப்புகளின் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
இன்று நீலாய் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக சைவ மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நாட்டில் உள்ள இந்து சமய அமைப்புகள்
ஆற்றலால் மட்டுமே இப்பணி வெற்றி முனையைச் சென்றடையும்.
நால்வர் நெறி நின்று சைவ சமயத்தை மீட்பதும் இந்துப் பெருமக்களும் சிவனடியாரும் சைவ சமய ஆகமங்கள், திருமுறைகள்,மெய்கண்ட சாத்திரங்களீல் பயிற்சி பெற்றுத் தம் சமய வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வழி காட்டுவதும் நோக்கமாய்க் கொண்டே ஆறாம் முறையாக இம்மாநாடு கூடுகிறது.
உலக சைவப் பெருமக்களின் ஆன்மீக வழிகாட்டியாக விளங்கும் பேரூராதீனத்தின் இருபத்தைந்தாம் குருமகா சந்நிதானம் திருப்பெருதிரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் வாழ்த்துரை வழங்கி மாநாட்டைத் தொடக்கி வைப்பது உலக அரங்கில் அங்கிகரிக்கப்பட்ட மாநாடாக திகழ்கிறது .
சிவபெருமானின் திருவருளே.
இவ்வாண்டு மாநாட்டுக்கான கருப்பொருள் “ என்கடன் பணி செய்து கிடப்பதே”. “எவ்வுயிர்க்கும் இயல்பான “ எம்பெருமான் திருவருளை நினைந்து அவன் திருவடிகளுக்கு நம்மால் செய்யத்தக்க பணி யாது என்று சிந்திப்பதே இக்கருப்பொருளின் உட்பொருள் ஆகும்.
நமது எதிர்காலச் சந்ததியினர்க்குச் சமயக் கல்வியை வழங்கும் திட்டங்களை சமய அமைப்புகள் வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சமய விழிப்புணர்வு பெறுவோம், சமயத் தெளிவு பெறுவோம்,
பேரவையின் நோக்கமும் , அறவாரியத்தின் பெருந்திட்டமும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
கடந்த வாரம் மலாயா பல்கலைக்கழகத்தில் 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசிய வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்தது.
இப்போது உலக சைவ மாநாட்டையும் மலேசிய ஏற்று நடத்துவது புதிய மைல்கல்லாகும் என்றார் அவர்.
மலேசிய சைவ சமயப் பேரவை தலைவர் முனைவர் நாகப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

