பத்து ஊபான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் குமரேசன் மிகச்சிறந்த வேட்பாளர்! அவரை மீண்டும் வெற்றி பெற செய்யுங்கள்….. அமைச்சர் சிவகுமார் பிரச்சாரம்

பினாங்கு ஆக.4-
பினாங்கு மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மை தொடர்ந்து நீடித்திருக்க பினாங்கு மாநில வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பினாங்கு மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து மனிதவள அமைச்சர் சிவகுமார் களம் இறங்கி இருக்கிறார்.

பினாங்கு மாநில கலை கலாசார இயக்கத்தின் தலைவர் ஜி. பாலநம்பியார் தலைமையில் நேற்று நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மனித வள அமைச்சர் சிவகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பினாங்கு பத்து ஊபான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கெஅடிலான் வேட்பாளர் குமரேசன் ஆறுமுகத்தை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

பினாங்கு மாநில முதல்வர் சாவ் கூன் இயோ, மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஸ், டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன், Bukit Tambun Calon Goh Chun Aik,Kebun Bunga Calon Lee Boon Heng, பினாங்கு மாநில கலை கலாசார இயக்கத்தின் செயலாளர் பரம் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பத்து ஊபான் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு குமரேசன் மிகச் சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறார்.

அந்த வகையில் இம்முறையும் அவரை அதிக வாக்குகளில் வெற்றி பெற செய்யுங்கள் என்று வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles