பிறை சட்டமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ ராஜூவை ஆதரித்து மனிதவள அமைச்சர் சிவகுமார் தீவிர பிரச்சாரம்

பிறை, ஆக 4-
பினாங்கு மாநிலத்தில் பிறை சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் டத்தோஸ்ரீ ராஜூவை ஆதரித்து மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேற்று தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பிறை சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் இம்முறை பிறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் டத்தோ ஸ்ரீ ராஜூ மிகச் சிறந்த வேட்பாளர்.

பிறை சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்கள் அவரை வெற்றி பெறச் செய்யும் படி மனித வள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியில் பினாங்கு மாநிலம் அபரீத வளர்ச்சி பெற்றுள்ளது.

அந்த வகையில் பினாங்கு மாநிலம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles