பக்கத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து ஐபிஎப் கட்சி தீவிர பிரச்சாரம்

ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து ஐபிஎப் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி இருக்கிறார்கள்.

சிலாங்கூர் டூசுன் தூவா சட்டமன்ற வேட்பாளர் டத்தோ ஜொஹான் அப்துல் அஜிஸ், செமினி சட்டமன்றத்தின் வேட்பாளர் வான் ஸுராய்கா, உலு லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சானி ஹம்சான், டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, தொடர்புப் பல்லூடக அமைச்சர் பாமி பாட்சில் ஆகியோர் ஆகியோருடன் இணைந்து ஐபிஎப் இளைஞர் பிரிவு தலைவர் கணேஷ் சம்பந்தன், மகளிர் தலைவி ராஜம்மாள் ஐபிஎப் கட்சி செயலாளர் மோகன் உட்பட ஐபிஎப் தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்
. நேற்று முன்தினம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செமினி பிரச்சாரத்தில் கலந்து கொண்டபோது பெரும் அளவில் ஐபிஎப் தொண்டர்கள் முழு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.கே.ஆர். உலு லாங்காட் தொகுதித் தலைவர் இராஜன் முனுசாமி, ம.இ.கா. உலு லாங்காட் தொகுதித் தலைவர் டத்தோ வீ.செல்வராஜா, ஐ.பி.எப். கட்சியின் டி.கே.பிரதர்ஸ் ஆலோசகர் டத்தோ கலையரசு, உலு லாங்காட் மகளிர் பிரிவுத் தலைவி கிருஷ்ணவேணி, காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் இராமச்சந்திரன் அர்ச்சுனன மற்றும் ம.இ.கா. உறுப்பினர்கள், பக்காத்தான் உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles