

காஜாங், ஆக.4-
உள்ளூர் வட்டார அரசு சார்பற்ற அமைப்புகளுடன் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கத்தில் காஜாங் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் டேவிட் சியோங் அரசு சார்பற்ற அமைப்புகளுடன் நேற்று சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
இச்சந்திப்புக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு சார்பற்ற இயக்கங்களோடு ஆலய மற்றும் தேவாலயம், காஜாங் மலேசிய இந்து சங்கம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களின் பிரச்சனைகளை முன்வைத்தனர். டேவிட் சியோங் அனைத்தையும் செவிமடுத்தார். இவையனைத்தையும் தம்மால் செய்த கொடுக்க முடியும் என்று உறுதியளித்த அவர், முதலில் தாம் வெற்றி பெற்றால்தான் இவற்றைச் செய்ய முடியும் என்று கூறினார்.
இந்நிகழ்வு புதன்கிழமை காஜாங் செண்ட்ரலிலுள்ள பேசில் லீஃப் உணவகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் பாலமுரளி கோவிந்தராஜு, காஜாங் கிராமத் தலைவர் ராஜ்குமார், டி.கே.பிரதர்ஸ் ஆலோசகர் டத்தோ கலையரசு, தலைவர் பாலன், சாய் பிரதர்ஸ் தலைவர் சி.ஆர். கார்த்திக், டாக்டர் கவிதா, டாக்டர் நம்பியார், பாலகிருஷ்ணன், ஜெய்காந்தன், தாமான் கியூபெக்சைச் சேர்ந்த சந்திரன் உட்பட 50க்கும் மேற்பட்ட அரசு சார்பற்ற இயக்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை காஜாங் கிராமத் தலைவர், ராஜ்குமார் ஏற்பாடு செய்தார். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், சட்டமன்றத் தொகுதி வேட்பாளருடனான ஒரு மணி நேரச் சந்திப்பில் விளக்கமளிப்பு வழங்கியதற்காகத் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

